2014 இல் சீனா தனது சந்திர பயணத்தைத் தொடங்கியதிலிருந்து 3 டன் அளவிற்கு விண்வெளிக் குப்பைகளை கொட்டி வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
விண்வெளிக் குப்பைகள் ஏனைய செயற்கைக் கோள்களுக்கு இடையூறாக விழுந்து கொண்டிருக்கிறது என்று நிபுணர்கள் கூறினாலும் அதனை சீனா மறுத்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் விண்வெளிக் குப்பை ஒன்று நாளை நிலவில் மோதவிருப்பதாகக் கூறப்படுகிறது.
மணிக்கு 9 ஆயிரத்து 300 கிலோ மீட்டர் வேகத்தில் மோதும் இந்தப் பொருளால் நிலவின் 10 முதல் 20 மீட்டர்கள் அளவிற்கு துளையை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.