ரஷ்ய அதிபர் புதின் ஏற்கனவே போர்க் குற்றங்களைச் செய்துள்ளதாகவும், எனவே அவர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஸ்காட்டிஷ் தேசியக் கட்சியின் விழாவில் பங்கேற்ற போரிஸ் ஜான்சன், உக்ரைனில் கண்மூடித்தனமான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதாகவும், ஒவ்வொரு மணி நேரத்திலும், உக்ரைனில் போரின் பயங்கரத்தை உலகம் கண்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.