உக்ரைன் தலைநகர் கீவ்வில் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில் மக்கள் அருகில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அரசு அறிவுறித்தி உள்ளது.
Druzhby Narodiv மெட்ரோ ரயில் நிலையம் அருகில் அடுத்தடுத்து 4 குண்டுகள் வீசப்பட்டதை அடுத்து கீவ், லிவிவ், கீவ் ஓபிளாஸ்ட், உள்ளிட்ட பகுதிகளுக்கு விமான தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன.
இதனிடையே கெர்சன் பகுதியை ரஷ்யப் படைகள் கைப்பறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரைச் சுற்றி ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.