பாகிஸ்தானின் குவெட்டா நகரில் காவல்துறை வேனை குறிவைத்து நடைபெற்ற பயங்கர குண்டு வெடித்ததில் டிஎஸ்பி அந்தஸ்துடைய போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
குவெட்டாவின் பாத்திமா ஜின்னா சாலையில் சென்றுக் கொண்டிருந்த போலீஸ் வேனில் இந்த குண்டு வெடித்தது.சுமார் இரண்டரை கிலோ எடை கொண்ட வெடிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.