உக்ரைன் மக்களுக்கு வழங்கி வந்த விசா இல்லாமல் பயணிக்கும் சலுகையை தற்காலிகமாக நிறுத்துவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு குறித்து தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள துபாயில் இருக்கும் உக்ரைன் தூதரகம், எந்த காரணத்திற்காக சலுகை தடை செய்யப்பட்டது என ஐக்கிய அரபு அமீரகம் விளக்கமளிக்கவில்லை என்றும் பதிவிட்டுள்ளது.
ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் உக்ரைன் மக்களுக்கு இந்த தடை பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உக்ரைன் மக்களுக்கு 5 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவிகளை வழங்குவதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது.