உக்ரைனின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, கெர்சன் நகரை கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ நிலைகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
இந்த நிலையில், கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த உக்ரைன் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய தொழில் நகரமான கெர்சன் நகரை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து கைப்பற்றியுள்ளது.
ரஷ்ய படைகள் நகருக்குள் நுழைந்துவிட்டதாக கெர்சன் நகர மேயர் நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று அந்நகரம் ரஷ்யா கைவசமாகியுள்ளது.