செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

விமானங்களில் வந்து கார்க்கிவ் நகரில் ரஷ்யப்படை தாக்குதல்..!

Mar 02, 2022 01:16:31 PM

ரஷ்யாவில் இருந்து விமானங்களில் வந்த படையினர் கார்க்கிவ் நகரில் இறங்கித் தாக்குதல் நடத்தி வருவதாக, உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் ரஷ்யப் படையினரின் தாக்குதல் ஏழாம் நாளாக இன்றும் நீடிக்கிறது. கீவ் நகரின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதால் இரவில் அபாயச் சங்கு ஒலிக்கப்பட்டது.  

உக்ரைனில் இரண்டாவது பெரிய நகரான கார்க்கிவில் விமானங்களில் வந்த ரஷ்யப் படையினர் பாராசூட் மூலம்  தரையிறங்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. ரஷ்யப் படையினர் ஒரு மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாகவும், தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர். 

செவ்வாயன்று குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதால் கார்க்கிவ் நகரில் இடிந்த கட்டடங்களின் சிதைவுகள் தெருக்களில் சிதறிக் கிடக்கின்றன.

இதனிடையே வாஷிங்டனில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மேலைநாடுகளில் உள்ள ரஷ்யத் தொழிலதிபர்களின் சொகுசுப் படகுகள், குடியிருப்புகள், தனி விமானங்கள் ஆகியன முடக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல் எதிரொலியாக அமெரிக்காவில் கச்சா எண்ணெய் விலை 5 விழுக்காடு அதிகரித்து ஒரு பீப்பாய் 110 டாலராக உள்ளது.

ரஷ்யாவின் சகாலின் எண்ணெய் வயலில் ரஷ்ய, இந்திய, ஜப்பானிய நிறுவனங்களுடன் இணைந்து எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவைச் சேர்ந்த எக்சான்மொபில் நிறுவனம் அங்கிருந்து படிப்படியாக வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

இதேபோல் பிபி, செல் நிறுவனங்களும் ரஷ்யாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளன. அதே நேரத்தில் பிரான்சின் டோட்டல் எனர்ஜீஸ் நிறுவனம் ரஷ்யாவில் தொடர்ந்து தொழில்செய்யும் என அறிவித்துள்ளது.


Advertisement
அக்டோபர் 1-ல் இஸ்ரேல் மீது 180 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல்.. 4 அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டது இஸ்ரேல்
மத்திய ஆப்ரிக்க காங்கோ நாட்டில் ஏரியில் சென்ற படகு கவிழ்ந்து விபத்து - 78 பேர் உயிரிழப்பு
ஈரான் அணுசக்தி நிலையங்களை முதலில் தாக்குங்கள்... டிரம்ப் இஸ்ரேலுக்கு அறிவுரை
ஹெஸ்புல்லா, இஸ்ரேல் இடையே தீவிரமடையும் மோதல்... லெபனானை விட்டு வெளியேறத் தொடங்கிய வெளிநாட்டினர்
ஏமனை நோக்கி அமெரிக்க, இங்கிலாந்து படைகள் தாக்குதல்.. ஹமாஸ், ஹெஸ்புல்லாவை அடுத்து ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு குறி..!
பாகிஸ்தான் செல்லும் இந்திய வெளியுறவு அமைச்சர்.. இரு நாட்டு உறவுகள் மேம்படுமா என எதிர்பார்ப்பு..!
கொரிய தீபகற்ப பாதுகாப்புக்கும், அமைதிக்கும் எதிராகச் செயல்படுவது தென்கொரியாதான் - கிம் ஜோங் உன்
ரஷ்யாவின் கம்சட்ஸ்கி தீபகற்பத்தில், கழிமுகத்தில் சிக்கிக்கொண்ட 4 ஓர்கா இன திமிங்கலங்கள்
இந்தியா, அமெரிக்கா இடையே கனிம வளங்கள் தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
இஸ்ரேல் மீண்டும் தாக்கினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் - ஈரான் அதிபர்

Advertisement
Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஆசையாக அழைத்த மனைவி... கணவனுக்கு காத்திருந்த ஷாக் சடலத்துடன் ஆட்டோ சவாரி..! ராஜதந்திரங்கள் வீணானது எப்படி ?

Posted Oct 06, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வாழ்ந்தால் உன்னோடு மட்டுந்தான் வாழுவேன்.. காதலிக்காக உயிர் தியாகம்..! 2k கிட்ஸின் சீரியஸ் காதல் சோகம்

Posted Oct 04, 2024 in தமிழ்நாடு,வீடியோ,செய்திகள்,Big Stories,

ரெக்கி ஆபரேஷனில் சிக்கிய ஆம்ஸ்ட்ராங்.. 4 ரவுடிகளின் 6 மாத பிளான்.. 4,892 பக்க குற்றப்பத்திரிகை... யானை சாய்க்கப்பட்டதன் திகில் பின்னணி...

Posted Oct 03, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அங்கன்வாடி மையத்தில் தப்பும் தவறுமாக தமிழ் ஆரம்பமே அமர்க்களமா..? என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை

Posted Oct 02, 2024 in உலகம்,Big Stories,

பகிரங்க மிரட்டல் விடுக்கும் ஈரான்.. பதிலடிக்கு தயாராகும் இஸ்ரேல்.. மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர் பதற்றம்..


Advertisement