உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசியில் உரையாடினார். உக்ரைன் மண்ணை காக்க தாங்கள் போராடி வருவதாகத் தெரிவித்த ஜெலன்ஸ்கி, ஆக்ரமிப்பாளர்களை உடனடியாக விரட்டியடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
ரஷ்யா மீது அமெரிக்கா எடுத்து வரும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகள் மிகவும் பலன் கொடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவரிடம் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் மனிதாபிமான உதவிகள் பாதுகாப்புக்கான உதவிகள் வழங்கப்படும் என்றும் ஜோ பைடன் உறுதியளித்துள்ளதாக டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்