ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் கச்சா எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடையக் கூடும் என்றும் அதனால் ரஷ்யா பலன் அடையும் என்றார். சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்த எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார்.
மேலும் உக்ரைனுக்கு ஆதரவாக டேங்கர் எதிர்ப்பு ஆயுதங்கள், வெடி மருந்துகளை அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்.