ரஷ்யாவின் நேரடித் தாக்குதலைத் தொடர்ந்து டிஜிட்டல் தாக்குதல் காரணமாக உக்ரைனின் அரசு இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.
உக்ரேனிய வெளியுறவு அமைச்சகம் மற்றும் அமெரிக்காவிற்கான உக்ரேனிய தூதரகம் உட்பட பல்வேறு தளங்கள் மீது டிஜிட்டல் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய சைபர் தாக்குதல்களுக்கு பிறகு தளங்கள் தற்காலிகமாக செயலிழந்துள்ளன என்றும், வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு புதிய இடத்திற்கு மாற்றப்படுவதாகவும் உக்ரைன் தகவல் தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.