செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் - ஐ.நா. பொதுச் செயலாளர்

Mar 01, 2022 06:25:36 AM

உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர்  ஆண்டானியோ குட்ரெஸ் தெரிவித்தார். ரஷ்யா அறிவித்துள்ள அணுசக்தி அவசரநிலை உக்ரைனுக்கு மட்டுமின்றி அனைவருக்குமானது எனக் குறிப்பிட்டார்.

ஐ.நா. பொதுச் சபையின் 11-வது அவசர சிறப்புக் கூட்டத்தில் 193 உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் பேசிய ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ், உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்தவும், அங்கிருக்கும் ரஷ்யப் படைகள் நிபந்தனைகளின்றி வெளியேற்றப்படவும் வேண்டும் என்றார்.
அணுசக்தி தற்காப்பு பிரிவை தயார் நிலையில் இருக்க அதிபர் புதின் உத்தரவிட்டது உக்ரைனுக்கு மட்டுமின்றி உலக நாடுகளுக்கான நெருக்கடி என்றார்.

அணு ஆயுத மோதல் என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒன்று என்று தெரிவித்த ஆண்டானியோ குட்ரெஸ், அதன் மூலம் ஒரு பயனையும் அடைய முடியாது என்றார். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென்றும், போர் நிறுத்த நடவடிக்கையை உக்ரைன், ரஷ்யா மேற்கொள்ள வேண்டும் என்றார்.

முன்னதாக பேசிய ஐ.நா.வுக்கான ரஷ்ய தூதர் Vassily Nebenzia, உக்ரைனை கைப்பற்றும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்றும், ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் உக்ரைன் ஈடுபட்டதாகவும் தெரிவித்தார்.

ரஷ்யாவின் அணுசக்தி அவசர நிலை, மூர்க்கதனமானது என்றும், அதனால் உக்ரைனுக்கு மற்றும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை என்றும் உக்ரைன் பிரதிநிதி குறிப்பிட்டார்.

இந்தியா உள்பட உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் இன்று உரை நிகழ்த்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்களின் உரையை தொடர்ந்து, ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement
நிலவில் ஆய்வு மேற்கொள்ளும் விண்வெளி வீரர்களுக்கான பிரத்யேக உடை - அறிமுகம் செய்த சீனா.. !!
இந்தியா உடனான நட்பு இஸ்ரேலுக்கு கிடைத்த வரம்.. ஐ.நா. மாநாட்டில் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாஹு புகழாரம்
"ஹெஸ்பெல்லாவிற்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும்" ஐ.நா.வில் இஸ்ரேல் பிரதமர் உரையாற்றிய அடுத்த சில மணி நேரத்தில் தாக்குதலை தொடுத்த இஸ்ரேல்
ஈரானில் தங்களால் தாக்க முடியாத இடமே இல்லை.. போருக்குப் போரே தீர்வு - இஸ்ரேல் பிரதமர்
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விவாதத்தில் பாடல் பாடிய டொனால்டு டிரம்ப்
புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் - அதிபர் ஜோ பைடன் கையெழுத்து
இஸ்ரேல் குண்டு வீச்சில் ஹெஸ்போலா கமாண்டர் உயிரிழப்பு
லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இந்தியா தூதரகம் அறிவுறுத்தல்
அமைதி உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு: ஜெலன்ஸ்கி
அமெரிக்காவின் முன்னணி டிராக்டர் நிறுவனம் 2 தொழிற்சாலைகளை மூட முடிவு

Advertisement
Posted Sep 28, 2024 in Big Stories,

தூக்குப்பா.. தூக்கிப் போடுங்க.. இப்படி ஒரு ஆபீசர் தான் வேணும்.. நடைபாதை நடக்குறதுக்கு தானே ?.. போலீசார் அதிரடி காட்டிய காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

கண்டெய்னருக்குள் க்ரெட்டா கார் பணத்துடன் தப்பிய கொள்ளை கும்பல் கொக்கி கொள்ளையன் சுட்டுக் கொலை..! பட்டப்பகலில் பர பர சேசிங் காட்சிகள்

Posted Sep 27, 2024 in தமிழ்நாடு,Big Stories,

ஏ.டி.எம் கொள்ளையர்களுடன் சென்ற கண்டெய்னர்.. தீரன் பட பாணியில் தப்ப முயன்ற கும்பல்... போலீஸ் என்கவுன்டரில் ஒருவன் பலி, 5 பேர் கைது

Posted Sep 28, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை நீர் மேலே.. தார்ச்சாலை என்ன ஒரு புத்திசாலி தனம்.. உத்தரவுக்கு கீழ்படிகிறார்களாம்..! தரமற்ற சாலைப் பணிக்கு மக்கள் எதிர்ப்பு

Posted Sep 27, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நான் ஆம்பளடா.. அடாவடி ஆட்டோ ஓட்டுனரை பிடித்து அடக்கிய அந்த இரு பெண்கள் ..! போக்குவரத்து ஊழியர்களுக்கு அடி உதை


Advertisement