ரஷ்ய ராணுவனத்தினர் சிலர் உக்ரைனின் வங்கி மற்றும் சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து, பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்துள்ள நிலையில், அங்குள்ள நகர் ஒன்றில் உள்ள சூப்பர் மார்கெட்டில் ரஷ்ய வீரர்கள் சூறையாடினர்.
தங்களுக்கு வேண்டிய பொருட்களை எடுத்து செல்வதுடன் கடையின் பணப்பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செல்வது போன்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதே போல், உக்ரைனின் கேர்சன் நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நுழைந்த ரஷ்ய ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பெட்டியை உடைத்து பணத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.