உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் அந்நாட்டு அரசின் ஊடகங்களுக்கு இணையத் தளத்தில் கட்டுப்பாடுகளை விதித்து அதன் தாய் நிறுவனமாக மெடா அறிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த முகநூலின் பாதுகாப்பு கொள்கை தலைவர் நதானியேல் கிளீச்சர், ரஷ்ய அரசு ஊடகங்கள் தங்கள் தளத்தில் விளம்பரம் செய்யவும் அதன் மூலம் வருமானம் ஈட்டவும் தடை விதித்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும், உக்ரைனின் நிலைமையை தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும், தங்கள் தளம் மூலம் மக்களைப் பாதுகாக்க தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ள நிலையில், முகநூலும் தற்போது அந்நாட்டிற்கு எதிராக களமிறங்கியுள்ளது.