உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அங்குள்ள இந்திய தூதரகத்தின் அறிவுறுத்தல் இல்லாமல் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதால் தன்னிச்சையாக இந்தியர்கள் யாரும் உக்ரைன் எல்லைப்பகுதிகளுக்கு சென்றுவிட வேண்டாம் என அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் டுவிட்டரில் கேட்டுக்கொண்டுள்ளது. மீறி எல்லைகளுக்கு சென்று சிக்கிக்கொண்டால் அந்த சமயத்தில் உதவுவது கடினமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எல்லைப்பகுதிகளுக்கு நகர்வதைக் காட்டிலும் மேற்கு நகரங்களில் எந்த அச்சுறுத்தலும் இல்லாததுடன், உணவு மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கும் அங்கு எந்த பிரச்சனையும் இல்லை என்பதால் அங்கிருப்பவர்கள் எல்லை பகுதிகளுக்கு செல்ல முயல்வதை காட்டிலும் அங்கேயே இருப்பது தான் பாதுகாப்பானது என தூதரகம் கூறியுள்ளது.
இதேபோல் கிழக்குப்பகுதியில் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இருக்கும் இந்தியர்கள் அவரவர் தங்கியிருக்கும் இடங்களை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.