செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறும் கதிர்வீச்சின் அளவு அதிகரித்து வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் 2ஆவது நாளாக தொடரும் நிலையில், ரஷ்ய படைகள் செர்னோபிலில் உள்ள அணு ஆலையை கைப்பற்ற முயல்வதாகவும், இது ஒட்டுமொத்த ஐரோப்பாவிற்கும் எதிரான போர்ப் பிரகடனம் என்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், செர்னோபில் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதியில் இருந்து காமா கதிர்வீச்சு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, தங்கள் பிராந்தியத்தில் கதிர்வீச்சின் அளவு அதிகரித்தது குறித்து ஏதும் பதிவாகவில்லை என உக்ரைனின் அண்டை நாடான போலந்து கூறியுள்ளது.