உக்ரைனில் ரஷ்யப் படைகள் முன்னேறி வரும் நிலையில், உக்ரைனில் ஆயிரக்கணக்கிலான கணினிகளை குறிவைத்து தீங்கிழைக்கும் மென்பொருள் data-wiping software நிறுவப்பட்டுள்ளதாக இணைய பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, மறுபுறம் சைபர் தாக்குதலையும் நடத்தி வருகிறது.
இணைய பாதுகாப்பு நிறுவனமான ESTE ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் பல கணினிகளை இந்த மென்பொருள் தாக்கியுள்ளதாகவும், நாடு முழுவதும் உள்ள கணினிகளில் டேட்டா அழிக்கும் திட்டத்தை ரஷ்யா மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.