உக்ரைனில் இருந்து அகதிகளாக வெளியேறும் மக்களுக்கு உதவ தயாராக உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் நாட்டைவிட்டு வெளியேறும் உக்ரைன் மக்களை ஏற்க தயாராக உள்ளதாகவும், ஆனால் அண்டை நாடுகளில் தஞ்சமடைய மக்கள் விரும்பலாம் என எதிர்பார்க்கப்படுவதால் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் செர்னோபிலை கைப்பற்றிய ரஷ்ய படைகள் அங்குள்ள அணு உலையில் பணியாற்றியவர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.