உக்ரைனை விட்டு மக்கள் வெளியேற அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படை தடை விதித்துள்ளது.
ராணுவ தேவைகளுக்காகவும், அடுத்த கட்ட போர் நடவடிக்கைகளுக்காகவும் இந்த ராணுவச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. உக்ரைனில் அடுத்த 90 நாட்களுக்கு பொது அணித் திரட்டலுக்கான அவசர நிலை ஒப்பந்தத்தில் அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டார்.
இதையடுத்து போர் நடவடிக்கைகளில் ஈடுபட பொது மக்கள் ராணுவ வீரர்கள் எந்நேரமும் அழைக்கப்படுவார்கள் என அதிபர் தெரிவித்தார். மேலும் 18 முதல் 60 வயதுடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்றார்.