உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ளதன் எதிரொலியால், கச்சா எண்ணெய் விலை 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 100 டாலரை எட்டியுள்ளது.
2014ஆம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெய் விலை நூறு டாலரை எட்டியுள்ள நிலையில், இது ஐரோப்பிய நாடுகளில் எரிசக்தி விநியோகத்தை கடுமையாக பாதிக்கும் என்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலகில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ரஷ்யா, முக்கியமாக ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகளவில் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும், இயற்கை எரிவாயு விநியோகத்திலும் மிகப்பெரிய நாடாக விளங்கும் ரஷ்யா, மொத்த விநியோகத்தில் 35சதவீதத்தை ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்குகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 டாலர் என்றளவில் உயர்ந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் கச்சா எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டாலரைத் தொட்டுள்ளது. இதனால், உலகளவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.