செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
உலகம்

கப்பல் போக்குவரத்து நிறுத்தம்.. தரைப்படையினர் படையெடுப்பு..!

Feb 24, 2022 04:33:19 PM

அசோவ் கடலில் உக்ரைனுக்கான கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா, பெலாரஸ் எல்லைகளில் இருந்து ரஷ்யத் தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்ய எல்லையை ஒட்டிய கார்க்கிவ் மாநிலத்தில் உள்ள சுகுயேவ் விமானப்படைத் தளத்தின் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால் அப்பகுதி புகைமண்டலமாகக் காட்சியளித்தது.

 வடக்கே பெலாரசில் இருந்தும், வடக்கிலும் கிழக்கிலும் ரஷ்யாவில் இருந்தும் எனப் பலமுனைகளிலும் ரஷ்யத் தரைப்படையினர் உக்ரைனுக்குள் படையெடுத்துள்ளதை அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த மோதலில் உக்ரைன் படையினர் உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

 இதேபோல் உக்ரைனுக்குத் தெற்கே உள்ள அசோவ் கடல் வழியாக அந்நாட்டின் மரியுபோல் துறைமுகத்துக்குக் கப்பல் போக்குவரத்தையும் நிறுத்திவிட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

 உக்ரைன் மீது ரஷ்யாவின் படையெடுப்பால் மாஸ்கோ பங்குச்சந்தையில் பங்குவிலைக் குறியீடு 14 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது. இதையடுத்துப் பங்குச்சந்தையில் வணிகம் நிறுத்தப்பட்டது. உடனடியாக ரஷ்ய நடுவண் வங்கி தலையிட்ட பின் மீண்டும் பங்குச்சந்தையில் வணிகம் தொடங்கியுள்ளது.

அசோவ் கடற்கரையில் ரஷ்யாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள மரியுபோலில் விமானப்படைத் தளங்கள், ராணுவ முகாம்கள் மீது ரஷ்ய விமானங்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தின. இதனால் விமான நிலையத்தையொட்டி உள்ள பகுதி புகைமூட்டமாகக் காட்சியளித்தது. ரஷ்ய பீரங்கிப் படைகள் எல்லையைத் தாண்டி மரியுபோல் நகருக்குள் நுழைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 கருங்கடலில் நிறுத்தப்பட்டுள்ள ரஷ்யப் போர்க்கப்பல்களில் இருந்து உக்ரைன் நகரங்கள் மீது ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எரிந்து விழுந்த ஒரு ஏவுகணையின் சிதைவுகளை உக்ரைன் காவல்துறையினர் பார்வையிட்டனர்.

 கிழக்கு உக்ரைனில் லுகான்ஸ்க் மண்டலத்தில் உள்ள நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு பெற்ற உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.




Advertisement
அண்டார்டிகாவில் மின்சார பேருந்து சேவை.. எப்போது பயன்பாட்டிற்கு வரும்...?
நைஜீரியாவில் கனமழை காரணமாக, 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு
இலையுதிர் கால திருவிழாவை கொண்டாடிய சீன விண்வெளி வீரர்கள்
நிலவிலிருந்து பாறைகளை பூமிக்கு எடுத்து வரும் சந்திரயான் 4 திட்டத்திற்கு ஒப்புதல்
டப்பர்வேர் நிறுவனம், திவால் ஆகும் நிலை..?
ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?
பாலஸ்தீனத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் : கமலா ஹாரிஸ்
அமெரிக்காவில் ஒலி மாசு மற்றும் இசை காரணமாக கேட்கும் திறனை இழக்கும் இளைஞர்கள்
டிரம்பை சுட முயன்றவருக்கு உடந்தை யார்? போலீசார் தீவிர விசாரணை
சீனாவின் ஷாங்காய் நகரில் மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசிய பெபின்கா சூறாவளி

Advertisement
Posted Sep 20, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

நீயா.. நானா சண்டை அப்பு பிரியாணி கடைக்கு ஆப்பு வைத்த அதிகாரிகள்..!

Posted Sep 19, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

பெண்ணை கொலை செய்து டிராவல் பேக்கில் அடைத்தது ஏன் ? போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்

Posted Sep 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஓ.. இது தான் சிங்கப்பூர் முட்டையா? 2 ரூபாய்க்கு முட்டைய வாங்கி 15 ரூபாய்க்கு ஆம்லேட் விற்பனை..! ஓட்டல் உரிமையாளர் , சத்துணவு அமைப்பாளர் கைது

Posted Sep 18, 2024 in உலகம்,வீடியோ,Big Stories,

ஆயிரக்கணக்கில் வெடித்துச்சிதறிய பேஜர் கருவிகள்.. 11 பேர் பலி.. 4,000 பேர் படுகாயம்... பேஜர் கருவிகள் வெடிகுண்டாக மாறியது எப்படி?

Posted Sep 18, 2024 in வீடியோ,சென்னை,Big Stories,

போலீஸ் என்கவுன்டர் ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக் கொல்லப்பட்டது ஏன்? ரவுடி பாஷையில் பதில் அடி..!


Advertisement