ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் கணிசமாக குறைந்துவிட்டதையடுத்து தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.
இதையடுத்து ஏராளமான சுற்றுலாப்பயணிகள் அங்கு சென்ற வண்ணம் உள்ளனர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு தங்களது உறவினர்களை சந்தித்த அவர்கள் அன்புப் பெருக்கில் ஆரத்தழுவி ஆனந்தக்கண்ணீர் விட்டனர்.
சிட்னி விமான நிலையத்தில் வந்திறங்கிய சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் விதமாக அவர்களுக்கு, விமான நிலைய அதிகாரிகள் பிஸ்கட்டுகள், ஜாம், கோலா கரடி பொம்மையை பரிசளித்தனர். கொரானா காரணமாக 2 ஆண்டுகளாக முடங்கியிருந்த சுற்றுலாத்துறை தற்போது மீண்டெழுந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலாத்துறை அமைச்சர் டேன் டேகன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.