சிலி நாட்டின் கடற்கரையில் ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்குள்ள பயோ பயோ பகுதியில் உள்ள கடலில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக சுற்றுச்சூழல் அதிகாரிகள் கடல் தண்ணீரின் மாதிரியை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் கடல் தண்ணீரில் வழக்கத்தை விட அதிக அளவு ஆக்சிஜன் அளவு கூடியதால் தான் மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.