சுவிட்சர்லாந்தில் முகக்கவசம் உள்ளிட்ட ஏறக்குறைய அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திரும்பப் பெறப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
உணவகங்கள், மதுக்கூடங்கள், திரையரங்குகள், கேளிக்கை விடுதிகளில் தடுப்பூசி சான்றிதழ் அவசியம் என்ற முறை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து மற்றும் மருத்துவமனைகளுக்கு செல்லும்போது மட்டும் மக்கள் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் சுவிட்சர்லாந்திற்கு வருவதற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.