வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் 4 நாள் வேலைத் திட்டத்தை ஸ்காட்லாந்து கொண்டு வந்தது. அதேபோல், ஸ்பெயின், ஐஸ்லாந்து, ஜப்பானும் இத்திட்டத்தை அறிவித்திருந்தன.
இந்நிலையில், 4 நாட்கள் வேலை திட்டத்திற்கு மெல்ஜியம் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இத்திட்டம் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இது குறித்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் டி க்ரூ, (Alexander De Croo) கொரோனா காலத்தில் பணிச்சூழல் மாறியதற்கு ஏற்ப, பணியாளர்களும் மாற வேண்டியுள்ளதாகவும், குடும்பத்திற்கும்,வேலைக்கும் சமமான நேரத்தை ஒதுக்கும் நோக்கில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளதாகவும் குறிப்பிட்டார்.