கொலம்பியாவில் மின் கம்பத்தில் ஏறி மின் கம்பியை பிடித்து தொங்கிக்கொண்டிருந்த தேனுண்ணும் கரடி வகையைச் சேர்ந்த ஸ்லாத் (Sloth) கரடியை மின்சார ஊழியர் ஒருவர் பத்திரமாக மீட்டார்.
ஆன்டியோக்குவியா (Antioquia) மாகாணத்தின் டராசா (Taraza) நகரில் மின் கம்பியில் தொங்கிய கரடி குறித்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் வந்த ஊழியர், மின் கம்பத்தில் ஏறி கரடியை பிடிக்க முயற்சி செய்தார்.
அவரை பார்த்து அந்த கரடி முதலில் சிறிது அஞ்சிய நிலையில், நீண்ட துடைப்பத்தின் உதவியுடன் கரடியை அவர் பத்திரமாக மீட்டார். 20 நிமிடங்கள் போராடி மீட்கப்பட்ட கரடி வனத்தில் விடப்பட்டது.