லிபியாவில் பிரதமர் Abdulhamid al-Dbeibah கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் பிரதமரின் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் குறித்த எந்த தகவலுமில்லை என்றும் தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். உள்நாட்டு குளறுபடிகளால் பிளவுபட்டு கிடக்கும் லிபியாவில், தேர்தல் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.
தேர்தலுக்கு பின்னரே ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகுவேன் என Abdulhamid al-Dbeibah கூறியுள்ளதால் தாக்குதல் அரசியல் சதியா என விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.