கொலம்பியாவின் டோஸ்கேப்ராடாஸ் (Dosquebradas) பகுதியில் கன மழை வெளுத்து வாங்கியதன் எதிரொலியாக ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் அப்பகுதியில் ஏற்பட்டுள்ள சேதங்களை விவரிக்கும் டிரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலச்சரிவில் சிக்கி 14 பேர் உயிரிழந்திருப்பதுடன், 35 பேர் படுகாயமடைந்திருப்பதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.
மேலும் அப்பகுதியில் உள்ள Otun ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால் முன்னெச்சரிக்கையாக கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
காஃபி பயிர் அதிகம் விளையும் இந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான வீடுகள் சேதமடைந்திருப்பதால் வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கும் மாற்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.