கிரீஸில் இரு வேறு உள்ளூர் கால்பந்து கிளப் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 வயது இளைஞர் கொல்லப்பட்டதாக கூறப்படும் நிலையில், விளையாட்டு போட்டி தொடர்பான மோதல்களை தடுக்க கடுமையான விதிகள் அமல்படுத்தப்படும் என அந்நாட்டி அரசு அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விளையாட்டு துறையை சீர்திருத்தும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என கிரீஸ் அரசு தெரிவித்துள்ளது.