உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதன் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்றும், ரஷ்யாவுக்குச் சீனா உதவினால் அதன் மீதும் ஏற்றுமதித் தடைகள் விதிக்கப்படும் என்றும் அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இது குறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்தால் அதன் பொருளாதாரம் மேலும் சீர்குலையும் எனத் தெரிவித்தார். சீனாவுடன் ரஷ்யா கூட்டுச் சேர்ந்திருந்தாலும் விளைவுகளை எதிர்கொள்ள இயலாது எனத் தெரிவித்தார்.