அமெரிக்காவில் ராணுவ வீரர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமக்கப்பட்டுள்ள நிலையில் அதை செலுத்திக்கொள்ளாமல் இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீரர்கள் பணியிழக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
போருக்கு தயார்நிலையில் இருப்பதற்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டிருப்பது அவசியம் என்பதால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத வீரர்கள் மற்ற வீரர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு, போர் தயார் நிலையையும் பாதிப்புக்குள்ளாக்குவதாக அந்நாட்டு ராணுவ செயலாளர் கிறிஸ்டின் வோர்முத் தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறை ரிசர்வ் படையினர், பயிற்சி வீரர்கள், வீரர்கள் என அனைவருக்கும் பொருந்தும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.