வடகொரியா அடுத்தடுத்து தொலைதூர ஏவுகணை சோதனையை நிகழ்த்தி வரும் நிலையில், இதற்கு ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரே மாதத்தில் 7 ஏவுகணைகளை சோதனை செய்த வட கொரியா, கடந்த ஞாயிற்றுக்கிழமை 2017ம் ஆண்டில் இருந்து இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சக்தி வாய்ந்த ஏவுகணையை சோதித்து பார்த்தது.
இது அமெரிக்கா வரை சென்று தாக்கும் என்பதால், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் விதிகளை மீறிவிட்டதாக அன்டோனியா குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.