பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு மத்தியில், அங்குள்ள மருந்துக்கடைகளில் பாராசிட்டமால் மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து கூறியுள்ள அந்நாட்டு மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி ஒருவர், கொரோனா நோயாளிகளிகளுக்கும், டெங்கு நோயாளிகளுக்கும் அதிகளவில் பாராசிட்டமால் மாத்திரைகள் தேவைப்படுவதாலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் தற்போது கொரோனா 5-வது அலைப்பரவல் வேகமெடுத்து வருகிறது. நாடு முழுவதும் 1 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.