மன்னார் வளைகுடாவில், மீனவர் வலையில் சிக்கிய அரியவகை கடல்பசு மீண்டும் கடலில் விடப்பட்டது. கடல் மாசு காரணமாக கடலுக்கடியில் வளரும் புற்கள் அழிந்து வருவதால், அவற்றை உணவாக உட்கொள்ளும் கடல்பசுக்களும் வேகமாக அழிந்து வருகின்றன.
மன்னார் வளைகுடாவில் தற்போது 200-க்கும் குறைவான கடல்பசுக்களே உள்ளதால், அவற்றின் வாழ்விடங்களில் கடற்புற்களை வளர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கடல்பசுக்களை பாதுகாக்கப்பட்ட உயிரினமாக வனத்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில் மண்டபம் நாட்டுப்படகு மீனவர்கள் விரித்த வலையில் கடல்பசு ஒன்று சிக்கியது. மீனவர்கள் உடனடியாக வலையை அறுத்து கடல்பசுவை கடலில் விட்டனர்.