தாய்லாந்தில் போதிய கவசங்களின்றி வெறும் கைகளால் இளைஞர் ஒருவர் ராஜ நாகத்தை பிடிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.
தாய் மாகாணத்தில் உள்ள பனை தோட்டத்தில் நான்கரை அடி நீளமுள்ள ராஜநாகம் புகுந்தது. ராஜ நாகம் குறித்து தகவல் அறிவந்து வந்த பாம்பு பிடி வீரர் Sutee Naewhaad, கழிவு நீர் தொட்டிக்குள் மறைய முயன்ற பாம்பை வெறும் கைகளால் பிடித்தார்.
தன் இணையைத் தேடி ராஜ நாகம் ஊருக்குள் வந்திருக்கலாம் என்றும், அடர்ந்த வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ நாகத்தை இளைஞர் பிடிக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.