வடகொரியா உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணியளவில் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஹேம்ஹங் நகர் அருகே இருந்து 2 குறுகிய தூர இலக்குகளை தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென்கொரிய ராணுவ தளபதிகள் தெரிவித்துள்ளனர்.
இது இந்த மாதத்தில் வடகொரியா நடத்திய 6-வது ஏவுகணை சோதனை ஆகும். இந்நிலையில் இது தொடர்பாக சீனாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஸாவோ லிஜியன், அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து கொரிய தீபகற்பத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.