ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
மெல்போர்னில் நடைபெற்ற 4வது சுற்று ஆட்டத்தில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஆஷ்லே பார்டி வெற்றி பெற்றாலும், இளம் அமெரிக்க வீராங்கனையான அமண்டா அனிசிமோவா அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
இந்த தொடரை ஆஷ்லே பார்டி கைப்பற்றினால், 42 ஆண்டுகளுக்குப் பின் ஆஸ்திரேலிய ஓபனை வெல்லும் ஆஸ்திரேலிய வீராங்கனை என்ற சாதனையை அவர் படைப்பார்.