உலகின் மிகவும் அரிய வகை கருப்பு நிற வைரக்கல் முதன்முறையாக மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்ட நிலையில், அடுத்த மாதம் அது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனிக்மா என பெயரிடப்பட்டுள்ள இந்த 555 கேரட் எடையுள்ள வைரம், துபாயில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 260 கோடி ஆண்டுகளுக்கு முன்பு விண்கல் அல்லது சிறுகோள் பூமியில் மோதிய போது இந்த வைரம் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
55 முகங்கள் கொண்ட இந்த வைரம் இந்திய மதிப்பில் சுமார் 37 கோடி ரூபாய்க்கு மேல் விலை போகும் என எதிர்பார்க்கப்படுவதாக ஏல நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரம் இதுவரை யாரிடம் இருந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.