ஈராக்கில் சாலையில் கொட்டிக்கிடக்கும் பனியில் நாய்கள் துள்ளிக்குதித்து உற்சாகமாய் விளையாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஈராக்கில் தற்போது கடும் பனிக்காலம் ஆகும்.
சாலைகள், வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களின் மேற்பரப்பில் அதிகளவில் பனிப்பொழிவு ஏற்பட்டு பனிப்போர்வை போர்த்தியதை போன்று காட்சியளிக்கின்றன.
இந்நிலையில் சுலைமன்யா நகரில் சாலையில் கொட்டியிருந்த பனியில் 3 நாய்கள் உற்சாகமாக ஓடியாடி விளையாடும் காட்சிகளை உள்ளூர்வாசி ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த காட்சிகள் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளன.