அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்ட சீன வம்சாவளி பெண்ணின் நினைவேந்தலில் பங்கேற்றவர்கள் சீனர்களுக்கு எதிரான வெறுப்பு மனப்பான்மையை கைவிடுமாறு வலியுறுத்தினர்.
கொரோனா பரவல் தொடங்கியது முதலே சீனர்கள் மீதான வெறுப்பு அமெரிக்கர்கள் மத்தியில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், 40 வயது சீன வம்சாவளி பெண்ணான மிச்செல் கோ காலை அலுவலகம் செல்ல ரயிலுக்காக காத்திருந்த போது, வீடற்ற நபர் ஒருவரால் தண்டவாளத்தில் தள்ளி கொலை செய்யப்பட்டார்.
இதனை செய்த 61 வயது முதியவரை கைது செய்த போலீசார் சீனர்கள் மீதான வெறுப்பால் அவர் அப்பெண்ணை கொலை செய்யவில்லை எனத் தெரிவித்தனர்.