அபுதாபியில் நிகழ்த்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
2015-ம் ஆண்டு முதல் ஏமனில் அரசு படைகளுக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ஏமன் அரசுக்கு உதவியாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ராணுவங்கள் களமிறங்கியுள்ளன.
இதற்கிடையே, அபுதாபியில் உள்ள விமான நிலையம் மற்றும் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று நிகழ்த்திய டிரோன் தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக ஏமன் தலைநகர் சனாவில் முகாமிட்டுள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் நிகழ்த்திய வான் தாக்குதலில் 20 பேர் கொல்லப்பட்டனர்.