எண்ணெய் கசிவு காரணமாக பெரு நாட்டின் கடல் பகுதி, சுமார் 2 கிலோ மீட்டர் பரப்பளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கவேரா மற்றும் பாஹியா பிளான்கா தீவுகளின் கடற்கரையில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, பெரு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ரூபன் ரமிரெஸ் கூறியுள்ளார்.
தங்க நிறத்தில் ஜொலித்த இப்பகுதி தற்போது கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. லா பாம்பிலா சுத்திகரிப்பு நிலையத்திற்கு எண்ணெய் ஏற்றிச்சென்ற கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
டோங்கா அருகே சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் தாக்கத்தால் கடலில் எழுந்த உயர் அலைகள் காரணமாக, கப்பலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடற்கரையில் எண்ணெய் படலத்தை அகற்றி சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.