ஆப்கானிஸ்தானில் வரும் மார்ச் 21-ஆம் தேதிக்குப் பிறகு சிறுமிகள் மற்றும் பெண்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
7-ம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவிகள் பள்ளிக்கு வர அனுமதி இல்லாத நிலையில், ஆப்கான் புத்தாண்டான மார்ச் 21-ஆம் தேதிக்கு பிறகு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் கலாச்சாரம் மற்றும் தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடமிருந்து மாணவிகள் தனித்து இருக்க வேண்டும் என தெரிவித்த அவர், இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க தேவையான இடவசதியை ஏற்பாடு செய்வது பெரிய சவாலாக இருந்து வருவதாக கூறினார்.