பால்கன் 9 ராக்கெட் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் 105 சிறிய ரக சாட்டிலைட்டுகளை எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது.
புளோரிடா ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் பூமியின் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.
தகவல் தொழில்நுட்பம், விண்வெளி பயணம் உள்ளிட்ட வசதிகளை சாட்டிலைட் ஆபரேட்டர்கள் பெற டிரான்ஸ்போர்டர் -3 என்ற திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சாட்டிலைட்டுகளை ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியது.