ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வேயில் ஊரடங்கு விதிகளால் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் சிறுமிகள் மத்தியில் கருவுறுதல் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் பள்ளிகளைத் திறக்க கோரிக்கை எழுந்துள்ளது.
சுமார் ஒன்றரை கோடி மக்கள் தொகை கொண்ட அந்நாட்டில், 2020 மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், அவ்வப்போது சில பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், குழந்தைகளுக்கான பாலியல் குற்ற சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தாத காரணத்தினாலும், வறுமை, கலாச்சார மற்றும் மத அடிப்படையிலான நம்பிக்கை காரணத்தினாலும் பல சிறுமிகள் கருவுற்று உள்ளதாக கூறப்படுகிறது.
ஊரடங்கு உத்தரவால் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்குவதற்கு வழியில்லாத 13 வயது சிறுமிகள் கூட குழந்தை பெற்றெடுத்த அவலம் நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. 2021 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பள்ளி மாணவிகள் இவ்வாறு கருவுற்று உள்ளதாக அந்நாட்டின் பெண்கள் விவகாரத்துறை அமைச்சர் Sithembiso Nyoni கவலைத் தெரிவித்துள்ளார்.