ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக தனி தடுப்பூசியை தயாரித்து வருவதாகவும், அது மார்ச்சில் தயாராகிவிடும் எனவும் அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய பைசர் தலைமைச் செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா, புதிதாக தயாரிக்கப்படும் தடுப்பூசி செயலாற்றும் வேகம், திறன் ஆகியவை குறித்த தகவல்கள் இனிமேல் தான் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகளே ஒமைக்ரானுக்கு எதிராக நியாயமான பாதுகாப்பை கொடுத்தாலும், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, பிரத்யேக தடுப்பூசி தயாராகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, ஒமைக்ரானுக்கு மட்டுமில்லாமல் புதிதாக உருமாறும் வைரஸ்களுக்கு எதிராக தடுப்பூசியை தயாரித்து வருவதாக மாடர்னா நிறுவனமும் கூறியுள்ளது.