கொரோனா பரவல் அச்சம் காரணமாக, சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க போவதில்லை என வடகொரியா அறிவித்துள்ளது.
இது குறித்து வடகொரியாவின் ஒலிம்பிக் கமிட்டி மற்றும் விளையாட்டு அமைச்சகம் சீனாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், வடகொரியாவுக்கு எதிரான விரோத சக்திகளின் நகர்வுகள் மற்றும் கொரோனா பரவல் சூழ்நிலை காரணமாக போட்டியில் பங்கேற்க முடியவில்லை எனவும், ஆனால் சீனா நடத்தும் ஒலிம்பிக் போட்டியை முழுமையாக ஆதரிப்போம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஒலிம்பிக் போட்டியை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தூதரக ரீதியில் புறக்கணிப்பது ஒலிம்பிக் போட்டியை அவமானப்படுத்துவது போன்றது எனவும் வடகொரியா கண்டனம் தெரிவித்துள்ளது