அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட விருந்து நிகழ்ச்சியின் போது மர்மநபர்கள் திடீரென நடத்திய துப்பாக்கிச்சூட்டிற்கு 3 பேர் பலியாகினர்.
மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கல்ஃப்போர்ட்டில் திறந்த வெளியில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியின் போது புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்னதாக மர்மநபர்கள் அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளனர்.
உடனடியாக அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற போதும் 3 பேர் சிக்கி பரிதாபமாக பலியாகினர்.
சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்த புலனாய்வுத்துறையினர் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் இதுவரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை.