கொரோனா பரவலை கட்டுப்படுத்த சீனா மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வரும் நிலையில், பல நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அந்நாட்டில் உள்ள சியான் நகரத்தில் தற்போது கடும் ஊரடங்கு அமலாகியிருக்கிறது. போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக குடும்பத்தில் ஒரு நபர் மட்டும் இரண்டு நாளைக்கு ஒருமுறை வெளியே வர அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு கடும் கட்டுபாடுகள் இருப்பினும், சியான் நகரில் புதிதாக 161 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
எனவே, சீனாவின் பல இடங்களில் சுகாதாரத்துறையினர் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெய்ஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது