அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதினுடன் தொலைபேசியில் சுமார் 50 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார். பிற்பகல் 3.35 மணிக்குத் தொடங்கி 4.25 வரை இந்தப் பேச்சுவார்த்தை நீடித்ததாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளைக் குவித்ததால் அங்கு நிலவும் பதற்றமான சூழல் குறித்து இருதலைவர்களும் ஆலோசனை நடத்தினர், பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜோபைடன் வலியுறுத்தியுள்ளார்.
புத்தாண்டில் ரஷ்யா அமெரிக்கா இடையே அரசு முறை பேச்சுவார்த்தைகள் தொடங்க உள்ளதைக் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் பதற்றத்தைத் தணித்த பிறகுதான் இருதரப்பிலும் சுமுகமான பேச்சுவார்த்தைகளுக்கான சூழல் உருவாகும் என்றும் ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். இரு தலைவர்களும் விரைவில் காணொலி வாயிலாக கலந்து பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.