பிரிட்டனைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது அதன் கண்ணாடி உடைந்து விழுந்த சம்பவத்தில் 200 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
லண்டனிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று கோஸ்டாரிகா நாட்டில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு கிறிஸ்துமஸ் தினத்தில் சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அந்த விமானத்துக்கு மேலாக 1000 அடி உயரத்தில் பறந்த மற்றொரு விமானத்திலிருந்து பிரிட்டன் விமானத்தின் முன்புற கண்ணாடியில் பனிக்கட்டி குவியல் விழுந்தது.
இதன் காரணமாக இரு அங்குல தடிமன் கொண்ட கண்ணாடியில் பலத்த விரிசல் ஏற்பட்டதை அடுத்து விமானிகள் மிகுந்த சாமர்த்தியமாக செயல்பட்டு விமானத்தை சான்ஜோஸ் நகரில் பத்திரமாக தரை இறக்கினர்.